உங்கள் சொந்த மொழியில் ஆலோசனை
துருக்கிய, அரபு, போர்த்துகீசியம், ஸ்பானிஷ், உருது, சோமாலி, அம்ஹரிக், டிக்ரின்யான், பெங்காலி, பாரசீகம், ஜப்பனீஸ், தமிழ்
வாட்டர்லூ சமூக ஆலோசனை (கவுன்சிலிங்) நிலையமானது, ஆலோசனை விரும்புவோருக்கு தத்தமது தாய்மொழியிலேயே கலந்துரையாடி நம்பிக்கையூட்டுகிறது. அதற்கமைய அவரவர் தாய்மொழியிலேயே ஆலோசனை அமர்வுகளை நடத்தும் சேவையினை வழங்கி வருகிறது. நீங்கள் பேசும் ஆங்கில மொழி மற்றவர்கட்கு புரியவில்லை அல்லது சில விடயங்களை உங்கள் தாய்மொழியிலேயே வெளிப்படுத்தலாமென நீங்கள் கருதுமிடத்து உங்கள் தாய்மொழி பேசும் ஆலோசகரை வழங்கியோ அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் ஊடாகவோ உங்களுடனான ஆலோசனை அமர்வுகளை நாம் நடத்துவோம். உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்படின், உங்கள் விருப்பத்திற்கமைய ஆண் அல்லது பெண் மொழிபெயர்ப்பாளரை நாம் ஒழுங்குபடுத்தி தருவோம்.
`கவுன்சிலிங்` எனக் கூறப்படும் ஆலோசனை எவ்வாறு உதவமுடியும்?
ஆலோசனையானது பல்வேறு உணர்ச்சி சிக்கல்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் சம்பந்தமாகவும் உதவ முடியும். குறிப்பாக:-
ஏக்கம் மற்றும் மன அழுத்தம்,
கையறுநிலை மற்றும் இழப்பு,
எஞ்சியிருக்கும் மன அதிர்ச்சி, துஷ்பிரயோகம், மற்றும் வீட்டைச்சார்ந்த வன்முறை,
தனிமை மற்றும் கலாச்சார சீரமைவு,
தாழ் சுய மரியாதை,
வீட்டில் அல்லது வேலைத்தளங்களில் உறவுச் சிக்கல்கள்.
நான் ஆலோசனையிலிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
இந்த ஆலோசனை அமர்வானது உங்களுக்கு ஒரு சுயாதீனமும் மற்றும் எந்தவொரு தீர்ப்பையும் எட்டாது நீங்கள் நம்பிக்கையுடன் கூறுபவற்றை உன்னிப்பாக கேட்டறிந்து உங்களுடன் இணைந்து உங்கள் நிலமையை சீரமைக்க உதவக்கூடிய ஒருவருடன் பேசும் வாய்ப்பை உங்களுக்கு தருகிறது. ஆலோசகர் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென கூற மாட்டார். மாறாக உங்கள் மனதிலிருக்கும் விடயங்களை நீங்கள் முற்றாக புரிவதற்கு உதவுவதுடன் பிரச்சினைகளை வேறு அல்லது மாற்று வழிகளில் அவற்றினை அணுகும் வழிமுறைகளை அடையாளம் காணவும் உதவுவார். உங்கள் இருவரதும் ஒத்த பணியானது, உங்கள் உள் வளங்களை அணுகும் செயல்முறையை நீங்கள் ஆரம்பிக்க தொடங்கி அதனூடாக நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கவும், மேலும் முன்னோக்கி செல்வதற்கான ஒரு வழி காணக்கூடியதாகவும் அமையும்.
இந்த நடமுறையின் ஆரம்பமாக, உங்கள் தேவைகளைப் பற்றி கலந்துரையாடி எந்தவிதமான ஆலோசனைக்களம் உங்களுக்கு உதவும் என அடையாளம் காணும் பொருட்டு நீங்கள் ஆரம்ப ஆலோசனை ஒன்றிற்கு அழைக்கப்படுவீர்கள். இந்த சந்திப்பானது ஏறத்தாழ ஒன்றரை அல்லது இரண்டு மணிநேரம் நீடிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எங்களால் உதவமுடியாதென நீங்களும் ஆலோசகரும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், நாங்கள் உங்களுக்கு உகந்த மாற்று சேவையை கண்டறிய முயற்சிப்போம்.
அடுத்து என்ன நடக்கும்?
ஒரு பொருத்தமான ஆலோசகர் கிடைக்கும் தருணத்தில், உங்களுக்கு வாரம் தோறும் 50 நிமிட அமர்வுகளுக்கான ஒரு முன்னேற்பாட்டு நியமன நேரம் வழங்கப்படும். உங்கள் அமர்வுகள் ஒவ்வொரு வாரமும் அதே நேரத்தில் அதே ஆலோசகருடன் வாட்டர்லூ சமூக ஆலோசனை நிலையத்தில் (WCC) நடைபெறும். உங்களுக்கு பதினெட்டு (18) ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படும்.
நான் மேலும் விபரங்களை எப்படி அறிய முடியும்?
எம்மை கீழ்க்காணும் முகவரியிலோ அல்லது தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொள்ளவும்:-
Waterloo Community Counselling
Greet House
Frazier Street
London
SE1 7BD
Tel: - 02079283462
(மொழிபெயர்த்தவர்:- ஜெய. கி. ரிஷிகரன்)